Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லி பயணம்

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லி பயணம்

By: vaithegi Tue, 04 July 2023 11:01:43 AM

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லி பயணம்

சென்னை: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லிக்கு பயணம் ... கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்து உள்ள நிலையில், அந்த கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்தபடி மேகதாதுவில் அணை கட்ட தீவிரம் காட்டி கொண்டு வருகிறது. கர்நாடக மாநில துணை முதலமைச்சர் சிவக்குமார் மத்திய நீர் வழித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கு கடந்த ஜூன் 20-ம் தேதி எழுதிய கடிதத்தில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

இதையடுத்து இந்த விவகாரம் தமிழகத்தில் மிக பெரும் பரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், கர்நாடகாவின் இந்த செயலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

delhi,tamil nadu water resources minister duraimurugan ,டெல்லி ,தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடகாவின் முயற்சிகளை தமிழக அரசு முறியடிக்கும் என்று தெரிவித்தார். இந்த நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார்.

அங்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சரை அவர் சந்திக்கிறார். மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து பேசுவதற்காக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லி புறப்பட்டு செல்கிறார். அவர் நாளை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செஷகாவத்தை சந்தித்து பேசவுள்ளார்.


Tags :
|