Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜப்பானிய முதலீட்டாளர்களை வரவேற்கும் தமிழகம்... முதல்வர் பெருமிதம்

ஜப்பானிய முதலீட்டாளர்களை வரவேற்கும் தமிழகம்... முதல்வர் பெருமிதம்

By: Nagaraj Sat, 27 May 2023 11:31:25 PM

ஜப்பானிய முதலீட்டாளர்களை வரவேற்கும் தமிழகம்... முதல்வர் பெருமிதம்

ஜப்பான்: சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு... ஜப்பானிய முதலீட்டாளர்களை சிவப்புக் கம்பளம் விரித்து தமிழகம் வரவேற்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

ஒசாகா நகரில் ஜெட்ரோ எனப்படும் ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புடன் இணைந்து நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் பங்கேற்றார்.

understanding,agreement,investment,chief minister,economic relations ,புரிந்துணர்வு, ஒப்பந்தம், முதலீடு, முதலமைச்சர், பொருளாதார உறவுகள்

சுமார் 80 ஜப்பானிய நிறுவனங்களின் மூத்த மேலாண்மை அலுவலர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் பேசிய முதலமைச்சர், இந்தியாவும் ஜப்பானும் ஆசியாவின் இரண்டு பெரிய மற்றும் பழம்பெரும் ஜனநாயக நாடுகள் என்று குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார உறவுகள் சமீப காலங்களில் மிகப் பெரும் எழுச்சி கண்டுள்ளதாகக் கூறிய அவர், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டுமே இதுவரை 5 ஆயிரத்து 596 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 4 ஆயிரத்து 244 பேருக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், 5 ஜப்பானிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Tags :