தமிழ் அரசியல் கட்சிகள் ஓரணியில் திரள கோரி போராட்டம்
By: Nagaraj Sun, 08 Jan 2023 6:01:39 PM
கொழும்பு: ஓரணியில் திரள வேண்டும்... அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள்க என வலியுறுத்தும் வகையிலான போராட்டம் 4வது நாளாக திருகோணமலையில் இடம்பெற்று வருகிறது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்து தொடர்ச்சியாக குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
குறித்த போராட்டத்தில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Tags :
protest |
youth |