Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழறிஞர், இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் உயிரிழந்தார்

தமிழறிஞர், இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் உயிரிழந்தார்

By: vaithegi Thu, 18 Aug 2022 4:44:19 PM

தமிழறிஞர், இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் உயிரிழந்தார்

சென்னை தமிழ் இலக்கிய பேச்சாளரும், பட்டிமன்ற நடுவரும், 'தமிழ்க்கடல்' நெல்லை கண்ணன்( 77) காலமானார். திருநெல்வேலியில் உள்ள இல்லத்தில், வயது முதிர்வு காரணமாக நெல்லை கண்ணன் காலமானார். நெல்லை கண்ணன். தமிழ் அறிஞராகவும், பட்டிமன்ற நடுவராகவும், பன்முகதன்மை கொண்டவராக நெல்லை கண்ணன் விளங்கினார்.

77 வயது நிரம்பிய இவர் வயது முதிர்வின் காரணமாகவும், நோய் தாக்கத்தின் காரணமாகவும் கடந்த சில நாட்களாகவே பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த ஒரு வாரமாக உணவு உட்கொள்ள முடியாமலும் அவதிப்பட்டு வந்த நிலையில் நெல்லை கண்ணன் தனது வீட்டில் இன்று உயிரிழந்தார்.

nellai kannan passed away , நெல்லை கண்ணன்,உயிரிழந்தார்

இதையடுத்து அவரது உடலுக்கு பல அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள், தமிழ் அறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி கொண்டு கொண்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சியில் பிரபல பேச்சாளராக விளங்கியவர்

மேலும் நெல்லை கண்ணன். இலக்கியம் மட்டுமல்லாமல், ஆன்மீக சொற்பொழிவாளர் என பன்முகம் கொண்டவர். கம்பர் ராமாயணத்தைக் கரைத்து குடித்தவர். தமிழ்க்கடல் என்றழைக்கப்படுபவர் மூத்த தலைவர் நெல்லை கண்ணன்..

Tags :