Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா வைரஸ் எப்போது ஒழியும் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

கொரோனா வைரஸ் எப்போது ஒழியும் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

By: Monisha Sat, 20 June 2020 1:44:14 PM

கொரோனா வைரஸ் எப்போது ஒழியும் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருவதை அடுத்து முழு ஊரடங்கு நேற்று முதல் அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். இந்நிலையில் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் முழு ஊரடங்கு மேலும் நீடிக்க வாய்ப்பில்லை. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் எப்போது ஒழியும் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும் என்றாலும், தமிழக அரசு கொரோனாவை தடுக்க தீவிர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் கொரோனாவை கட்டுப்படுத்தவே முழு ஊரடங்கு என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைப்பு முழு அளவில் இருந்தால் மட்டுமே கொரோனா வைரஸை முழுவதுமாக ஒழிக்க முடியும். நோய் பரவுதலை தடுக்கவே ஊரடங்கு என்பதை மக்கள் புரிந்து கொண்டு வீட்டில் இருந்து வெளியே வராமல் இருக்க வேண்டும்.

tamil nadu,coronavirus,cm edappadi palanisamy,chennai,curfew ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,முதல்வர் எடப்பாடி பழனிசாமி,சென்னை,ஊரடங்கு

ஊடகங்கள் உள்பட பல்வேறு வழிகளில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தி வருகிறோம். நம்முடைய மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் தீவிர முயற்சியால் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை குணமாக்கும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மேலும் கொரோனா வைரஸ் குறித்த நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் குறை கூறி வருவதை சுட்டிக்காட்டிய முதல்வர், கொரோனா வைரஸ் என்பது இதுவரை யாரும் சந்திக்காத ஒரு பிரச்சனை என்பதால் அதை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து மருத்துவ நிபுணர்களின் வழிகாட்டுதல்படி அரசு செயல்பட்டு வருவதாகவும், அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுவது பொருத்தமானது அல்ல. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Tags :