Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாம்பன் ரயில் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளான டேங்கர் மிதவை

பாம்பன் ரயில் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளான டேங்கர் மிதவை

By: Nagaraj Sat, 07 Nov 2020 1:25:02 PM

பாம்பன் ரயில் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளான டேங்கர் மிதவை

ரயில் பாலத்தில் மோதிய டேங்கர் மிதவை... பாம்பன் ரயில் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளான டேங்கர் மிதவையை பல மணிநேரம் போராட்டத்திற்கு பின் மீட்டனர்.

இதற்கிடையில் இப்படி தொடர்ந்து டேங்கர் மிதவை மோதுவதால் ரயில் பாலம் உறுதி தன்மை பாதிப்பு ஏற்பட்டுவதாக புகார் எழுந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில் பாம்பன் கடலில் 2.2 கிலோ மீட்டர் தொலைவில் கப்பல்கள் வந்து செல்லம் வகையில் ரயில் பாலம் 1914 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

இன்று வரையில் ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. 100 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் பாலத்தின் உறுதி தன்மையில் குறித்து ஆய்வு நடைபெற்றது. மேலும் இதே வழித்தடத்தில் புதிய ரயில் பாலம் அமைக்க திட்டமிட்டு 250 கோடியில் புதிய பாலம் கட்டுமான பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில், கடலுக்குள் தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு காங்கீரிட் கலவைகள் மற்றும் கட்டுமாக பொருள்கள் கொண்டு செல்ல டேங்கர் மிதவைகள் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், பாம்பன் கடல் பகுதியில் வழக்கம் போல நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கடலில் நீரோட்டம் அதிகளவில் இருக்கும்.

tanker float,bridge,stability,complaint,rescue,collision ,டேங்கர் மிதவை, பாலம், உறுதித்தன்மை, புகார், மீட்பு, மோதியது

அந்த காலகட்டத்தில் பாம்பன் கடல் பகுதியில் படகுகள் பாதுகாப்புடன் நிறுத்தப்படும். ஆனால் கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்படும் டேங்கர் மிதவைகள் பாதுகாப்பற்ற முறையில் நிறுத்தப்படுவதால் கயிற்றை அறுத்துக்கொண்டு பாம்பன் பாலத்தின் தூண்களில் மோதி விபத்து எற்படுகிறது.

இந்நிலையில், சனிக்கிழமை காலையில் டேங்கர் மிதவை அறுத்துக்கொண்டு பாலத்தின் தூண் மீது மோதியது. ஊழியர்கள் பல மணிநேரம் போராட்டத்திற்கு பின் நான்கு நாட்டு படகுகள் மூலம் னகட்டி மிதவையை இழுந்து சென்றனர். தொடர்ந்து பாம்பன் ரயில் பாலத்தின் தூண்கள் மீது டேங்கர் மிதவைகள் மோதுவதால் பாலத்தின் உறுதி தன்மை பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

Tags :
|
|