Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இங்கு உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு இன்று முதல் 3 நாட்கள் விடுமுறை

இங்கு உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு இன்று முதல் 3 நாட்கள் விடுமுறை

By: vaithegi Sat, 25 Feb 2023 11:27:06 AM

இங்கு உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு இன்று முதல் 3 நாட்கள் விடுமுறை

ஈரோடு : இடைத்தேர்தல் காரணமாக இன்று முதல் 3 நாட்கள் டாஸ்மாக் மூடல் ... ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி சார்பில் ஈபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசு போட்டியிடுகிறார்.

இதேபோன்று தேமுதிக மற்றும் நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகிறது. இடைத்தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு கை சின்னமும், அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னமும், தேமுதிக வேட்பாளருக்கு முரசு சின்னமும் வழங்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.

vacation,tasmac ,விடுமுறை,டாஸ்மாக்


இதையடுத்து இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் 100-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. தேர்தல் அமைதியாக நடைபெறும் வகையில் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே அதன்படி இன்று முதல் தொடர்ந்து 3 நாட்கள் அதாவது வரும் திங்கட்கிழமை வரை ஈரோடு கிழக்கு தொகுதியில் இயங்கும் மதுக்கடைகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மார்ச் 2-ம் தேதி மட்டும் மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதியில் இயங்கும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சிய கிருஷ்ணனுண்ணி அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags :