Advertisement

சென்னையில் இந்த தேதி டாஸ்மாக் கடைகள் மூடல்

By: vaithegi Thu, 02 Feb 2023 3:35:07 PM

சென்னையில் இந்த தேதி டாஸ்மாக் கடைகள் மூடல்

சென்னை: வருகிற 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மூடல் ..... டாஸ்மாக் கடைகளுக்கு பொதுவான விடுறை நாள் என ஒன்று கிடையாது. காந்தி ஜெய்ந்தி, திருவள்ளுவர் தினம் ஆகிய குறிப்பிட்ட நாட்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளிப்பது வழக்கம்.

அந்தவகையில் வடலூர் ராமலிங்கர் நினைவுதினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை அடுத்து இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

tasmac stores,chennai , டாஸ்மாக் கடைகள் ,சென்னை

“வடலூர் ராமலிங்கர் நினைவுதினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் கீழ், சென்னையில் உள்ள அனைத்து 'டாஸ்மாக்' கடைகளும், அனைத்துவிதமான 'பார்'களும் வருகிற 5-ந்தேதி கண்டிப்பாக மூடப்பட வேண்டும்.

எனவே அன்றையதினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபான விற்பனை விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ” என அவர் கூறியுள்ளார்.

Tags :