Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருப்பத்தூர் உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை முன்னிட்டு ..டாஸ்மாக் கடைஜூலை 12 விடுமுறை

திருப்பத்தூர் உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை முன்னிட்டு ..டாஸ்மாக் கடைஜூலை 12 விடுமுறை

By: vaithegi Sat, 09 July 2022 1:34:52 PM

திருப்பத்தூர் உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை முன்னிட்டு ..டாஸ்மாக் கடைஜூலை 12 விடுமுறை

திருப்பத்தூர் : தமிழகத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 5410 க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் அரசாங்கத்தால் நடத்தப்பட்டு கொண்டு வருகின்றன. மேலும், இந்த டாஸ்மாக் கடைகளின் வாயிலாகத் தான் அரசாங்கத்திற்கு கூடுதல் வருமானமும் கிடைக்கிறது. தமிழகத்தில் பெரும்பாலும் மதுபானக்கடைகள் சில முக்கிய அரசு விடுமுறை தினங்களில் மட்டுமே மூடப்படுகிறது.

அதாவது, காந்தி ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி, சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற தினங்களில் மட்டுமே மதுபான கடைகள் மூடப்படுகின்றன. இருந்தாலும் கூட விதிமுறைகளை மீறி சில இடங்களில் விடுமுறை தினங்களில் கூட மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த மாதனூர் ஒன்றியம் நாய்க்கனேரி ஊராட்சியில் இன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

tasmac shop,vote count ,டாஸ்மாக் கடை,ஓட்டு எண்ணிக்கை

இதையொட்டி வரும் ஜூலை 12 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மாதனூர் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. இதனால், மாதனுர் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வரும் ஜூலை12-ந்தேதி விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த அறிவிப்பையும் மீறி மாதனுர் கிராமத்தில் உள்ள மதுபானக் கடையை திறந்தாலோ அல்லது மதுபானம் விற்பனை செய்தாலோ அந்த மதுபான கடைகளுக்கான உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் அல்லது நிரந்தரமாக உரிமம் ரத்து செய்யப்படும் என்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா அறிவித்துள்ளார்.

Tags :