Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டாட்டா... பை..பை... அக்னி நட்சத்திரம் முடிந்தது... மழையும் பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி

டாட்டா... பை..பை... அக்னி நட்சத்திரம் முடிந்தது... மழையும் பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி

By: Nagaraj Thu, 28 May 2020 9:27:04 PM

டாட்டா... பை..பை... அக்னி நட்சத்திரம் முடிந்தது... மழையும் பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி

முடிந்தது அக்னி நட்சத்திரம் என்று மக்கள் பெருமூச்சு விடுகின்றனர், அதே நேரத்தில் மதுரை, நெல்லை, தேனி, புதுக்கோட்டைஉள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:

நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. மதுரை, திருச்சி, கரூர், தர்மபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்.

pudukkottai,agni star,end,rain,people ,புதுக்கோட்டை, அக்னி நட்சத்திரம், முடிவு, மழை, மக்கள்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளதால், மீனவர்கள் அடுத்த 5 நாட்களுக்கு அரபிக்கடலுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இன்றுடன் அக்னி நட்சத்திரம் என்கிற கத்திரி வெயில் முடிவடைந்துள்ளது. இதனால் மக்கள் பெருமூச்சு விடுகின்றனர், இதற்கிடையில் பருவமழை வரும் 1ம் தேதி முதல் தொடங்க வாய்ப்புகள் உள்ளது என்ற தகவலும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Tags :
|
|