Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நடப்பு நிதியாண்டில் கடந்த ஜனவரி 10-ந்தேதி வரை ரூ.14.71 லட்சம் கோடி வரி வசூல்

நடப்பு நிதியாண்டில் கடந்த ஜனவரி 10-ந்தேதி வரை ரூ.14.71 லட்சம் கோடி வரி வசூல்

By: vaithegi Thu, 12 Jan 2023 07:34:14 AM

நடப்பு நிதியாண்டில் கடந்த ஜனவரி 10-ந்தேதி வரை ரூ.14.71 லட்சம் கோடி வரி வசூல்

புதுடெல்லி: கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 24.58 சதவீதம் அதிகம் ...... நடப்பு நிதியாண்டின் நேரடி வரி வசூல் பற்றிய தரவுகளை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. எனவே அதன்படி நடப்பு நிதியாண்டில் கடந்த ஜனவரி 10-ந்தேதி வரை ரூ.14.71 லட்சம் கோடி வரி வசூலிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 24.58 சதவீதம் அதிகம் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது. இதில் திருப்பி செலுத்தும் தொகை போக நிகர வரி வசூல் ரூ.12.31 லட்சம் கோடியாக உள்ளது.

central government,central board of direct taxes ,மத்திய அரசு,வரி , மத்திய நேரடி வரிகள் வாரியம்

இது கடந்த ஆண்டு இதே காலகட்ட நிகர வரியை விட 19.55 சதவீதம் அதிகம் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் நேரடி வரிகள் மதிப்பீடு ரூ.14.20 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால் இதில் 86.68 சதவீதத்தை தற்போதைய நிகர வரி வசூல் எட்டியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்நிதியாண்டில் மொத்த அடிப்படையிலான கார்பரேட் வருமான வரி 19.72 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. தனிநபர் வருமான வரியும் 30.46 சதவீதம் அதிகரித்து இருப்பதாக நேரடி வரிகள் வாரியம் அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

Tags :