Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட டீக்கடைக்காரர் தற்கொலை

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட டீக்கடைக்காரர் தற்கொலை

By: Nagaraj Sat, 25 July 2020 7:36:52 PM

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட டீக்கடைக்காரர் தற்கொலை

கொரோனா பாதித்து சிகிச்சை பெற்ற டீக்கடைக்காரர் தனிமைப்படுத்தப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட6,785 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,99,749ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,320 ஆக அதிகரித்துள்ளது.

suicide,depression,tea shopkeeper,officers ,தற்கொலை, மனஉளைச்சல், டீக்கடைக்காரர், அதிகாரிகள்

கொரோனாவால் பாதித்தவர்கள் மட்டுமின்றி அதனால் ஏற்படும் மன உளைச்சலால் பலர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகமாக நடைபெற்று வருகிறது. இது போன்ற சம்பவம் இன்று திருவேற்காடு பகுதியிலும் நடந்துள்ளது.

திருவேற்காடு அருகே அயனம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஹரிதாஸ் (37). இவர் டீக்கடை நடத்தி வந்த நிலையில் இவருக்கு கொரோனா உறுதியானதால் கொரோனா முகாமில் 4 நாட்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். அதன் பின்னர் அவரை 14 நாட்கள் தனிமையில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுத்தியதன் பேரில், அவர் தன் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்த நிலையில் ஹரிதாஸ் தன் வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், அவரது உடலை தகனம் செய்ய ஏற்பாடு செய்தனர். தனிமைப்படுத்தப்பட்ட ஹரிதாஸ், மன உளைச்சலால் தான் தற்கொலை செய்து கொண்டார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Tags :