Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் – 2 கட் ஆப் மதிப்பெண்களை குறைக்க தேர்வர்கள் கோரிக்கை

ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் – 2 கட் ஆப் மதிப்பெண்களை குறைக்க தேர்வர்கள் கோரிக்கை

By: vaithegi Mon, 03 Apr 2023 2:35:49 PM

ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் – 2   கட் ஆப் மதிப்பெண்களை குறைக்க தேர்வர்கள் கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் கடந்த பிப்ரவரில் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் – 2 நடைபெற்றது. இந்த தேர்வை 2.54 லட்சம் பேர் எழுதினர். இந்த தேர்வின் முடிவுகள் அண்மையில் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதனையடுத்து அதில் 2 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்தனர்.

இந்த தேர்ச்சி சதவீதம் தேர்வர்கள் மத்தியிலும் கல்வியாளர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்தாண்டுகளை விட நடப்பு ஆண்டில் தேர்ச்சி சதவீதம் மிகவும் குறைந்துள்ளது. இந்த நிலைக்கு வினாத்தாள் வடிவமைப்பு, மதிப்பெண் நிர்ணயம் ஆகியவை காரணங்களாக கூறப்படுகிறது.

candidates,teacher qualification paper ,தேர்வர்கள் ,ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்

இந்த நிலையில் கட் ஆப் மதிப்பெண்களை குறைக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் தற்போது ஆசிரியர் பணியிடத்திற்கு தகுதித்தேர்வுடன் போட்டித்தேர்வும் நடத்தப்படுவதால் நிர்ணயிக்கப்பட்டுள்ள 55% கட் ஆப் மதிப்பெண்ணை குறைக்க வேண்டும் என வலியுத்தியுள்ளனர்.

Tags :