Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் கூடுதலாக 1030 முதுநிலை ஆசிரியர்களுக்கான பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதி வாரியம் முடிவு

தமிழகத்தில் கூடுதலாக 1030 முதுநிலை ஆசிரியர்களுக்கான பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதி வாரியம் முடிவு

By: vaithegi Thu, 04 Aug 2022 11:44:47 AM

தமிழகத்தில் கூடுதலாக 1030 முதுநிலை ஆசிரியர்களுக்கான பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதி வாரியம் முடிவு

சென்னை: தமிழகத்தில், ஆசிரியர் தகுதி வாரியத்தின் அடிப்படையில் தான் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு கொண்டு வருகின்றன. இதனிடையே, ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்களுக்கும் போட்டித்தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்வாகும் ஆசிரியர்களுக்கு மட்டுமே பணியிடம் நியமிக்கப்படும் என ஆசிரியர் தகுதி வாரியம் அறிவித்துள்ளது.

இதனிடையே, கடந்த 2020-21 ஆம் ஆண்டில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதற்கு பிறகு கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி 2022 முதல் பிப்ரவரி 20 ஆம் தேதி வரைக்கும் முதுநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டன.

teacher qualification board,master teacher ,ஆசிரியர் தகுதி வாரியம் ,முதுநிலை ஆசிரியர்

இதன் பின் முதுநிலை ஆசிரியர்களுக்கான உத்தேச விடை குறிப்புகளை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிட்டது. பணி விடை குறிப்பினை மறு ஆய்வு செய்யும் பணி மே 10 ஆம் தேதி முதல் ஜூன் 15 ஆம் தேதி வரை நடைபெற்றது.இதை அடுத்து இறுதியாக முதுநிலை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்விற்கான விடை குறிப்புகள் கடந்த ஜூலை 4 ஆம் தேதி வெளியானது.

இந்த நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை தேர்வு செய்வதற்கான முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, நடைபெற்று முடிந்த முதுநிலை ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வின் மூலம் கூடுதலாக 1030 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் மொத்தமாக 3237 பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Tags :