Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆசிரியர்கள் சில குறிப்பிட்ட பதிவேடுகளை பராமரிக்க தேவையில்லை

ஆசிரியர்கள் சில குறிப்பிட்ட பதிவேடுகளை பராமரிக்க தேவையில்லை

By: vaithegi Wed, 24 Aug 2022 2:00:59 PM

ஆசிரியர்கள் சில குறிப்பிட்ட பதிவேடுகளை பராமரிக்க தேவையில்லை

சென்னை: மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் பொருட்டு ஆசிரியர்கள் மாணவர்களின் கல்வித்திறனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு நாளும் வகுப்பில் மாணவர்களின் செயல்திறன், வருகை பதிவு மற்றும் கற்பிக்கப்பட்ட பாடத்திட்டங்களை ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்க முடியாமல் முழுமையாக பதிவேடுகளை தயார் செய்வதிலேயே முழு நேரமும் சென்றுவிடுவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், ஆசிரியர் ஒருவர் பதிவேடுகளை பதிவு செய்வதற்கான வேலையை வீட்டில் வைத்து செய்வதாகவும், இதனால் குடும்பத்தை கவனித்து கொள்ள முடியவில்லை என்றும், குடும்பத்துடன் நேரம் செலவிட முடியவில்லை எனவும் கூறி அழுதபடி வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

editors,registry ,ஆசிரியர்கள் , பதிவேடு

எனவே இதனால், ஆசிரியர்களின் கூடுதல் சுமையை குறைக்கும் பொருட்டு கருவூல பதிவேடு, சம்பள பிடித்தம் பதிவேடு, கூடுதல் பண பதிவேடு, நிரந்தர சம பதிவேடு, நிலுவையில் உள்ள சிறப்பு கட்டண பதிவேடு, அபராத பதிவேடு, பில் பதிவேடு

மேலும் தற்காலிக பதிவேடு உள்ளிட்ட 11 பதிவேடுகளை ஆசிரியர்கள் இனி தயார் செய்ய தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவேடுகளை தவிர்த்து பாட குறிப்பேடு பதிவேடுகளை பராமரித்தால் மட்டும் போதுமானது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :