Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை

பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை

By: vaithegi Tue, 23 May 2023 1:32:56 PM

பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் நடப்பு ஆண்டு கோடை வெப்பம் அதிக அளவில் உள்ளது. பகல் நேரங்களில் கொளுத்தும் வெயிலால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலைக்கு ஆளாகி உள்ளனர்.

தற்போது வெயில் 40 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் வெப்பம் பதிவாகி கொண்டு வருகிறது. இதன் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிபோக வாய்ப்புள்ளதா? என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

இதனை அடுத்து இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பள்ளிகள் திட்டமிட்டபடி 1 – 5ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற ஜூன் 5-ம் தேதியும் 6 – 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

authors,weil ,ஆசிரியர்கள் ,வெயில்

இந்த நிலையில் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது.

வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதாலும், வெளியூர்களுக்கு சென்றுள்ள மாணவர்கள் மீண்டும் ஊர் திரும்ப ஏதுவாகவும் ஜூன் மாதம் 12ம் தேதி பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Tags :