Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவை விரைவாக கட்டுப்படுத்த இந்திய, அமெரிக்க விஞ்ஞானிகள் குழுக்கள் விரைவில் பணி

கொரோனாவை விரைவாக கட்டுப்படுத்த இந்திய, அமெரிக்க விஞ்ஞானிகள் குழுக்கள் விரைவில் பணி

By: Karunakaran Thu, 03 Sept 2020 8:48:33 PM

கொரோனாவை விரைவாக கட்டுப்படுத்த இந்திய, அமெரிக்க விஞ்ஞானிகள் குழுக்கள் விரைவில் பணி

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் போராடி வருகின்றன. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கொரோனா தடுப்பு மருந்து மற்றும் தடுப்பூசி தயாரிப்பு பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்நிலையில், கொரோனா வைரசை விரைவாக கட்டுப்படுத்தி தீர்வுகள் காண இந்தியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் அடங்கிய 11 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் கொண்ட 11 குழுக்கள் இணைந்து விரைவில் கொரோனா தடுப்பு பணிகளை தொடங்க உள்ளன. ஆரம்பகால நோயறிதல் சோதனைகள், வைரஸ் தடுப்பு சிகிச்சை, மருந்து மறுபயன்பாடு, வென்டிலேட்டர் ஆராய்ச்சி, கிருமிநாசினி இயந்திரங்கள் மற்றும் கொரோனாவுக்கான சென்சார் அடிப்படையிலான அறிகுறியை கண்காணித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

india,american scientists,corona virus,corona test ,இந்தியா, அமெரிக்க விஞ்ஞானிகள், கொரோனா வைரஸ், கொரோனா சோதனை

அமெரிக்க-இந்தியா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப எண்டோவ்மென்ட் ஃபண்ட் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்ட மானியங்களின் கீழ் பெறப்பட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் இந்த குழுக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், கொரோனா சவாலை எதிர்கொள்ளும் வகையில் புதுமையான யோசனைகளை முன்வைக்கும் 11 இருதரப்பு குழுக்களுக்கு யு.எஸ்.ஐ.எஸ்.டி.இ.எஃப் விருதுகளை அறிவித்திருப்பதாகவும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதுமையான கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவோருக்கு வழிவகுக்கும் கூட்டு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் அமெரிக்காவின் வெறியுறவுத்துறை இணைந்து யு.எஸ்.ஐ.எஸ்.டி.இ.எஃப் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.


Tags :
|