Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியா-ஆசியா நாடுகளுடன் டேட்டா பரிமாற்றப் பணிக்கான தொழில்நுட்ப கப்பல் சென்னை வருகை

இந்தியா-ஆசியா நாடுகளுடன் டேட்டா பரிமாற்றப் பணிக்கான தொழில்நுட்ப கப்பல் சென்னை வருகை

By: Nagaraj Tue, 30 May 2023 11:20:17 AM

இந்தியா-ஆசியா நாடுகளுடன் டேட்டா பரிமாற்றப் பணிக்கான தொழில்நுட்ப கப்பல் சென்னை வருகை

சென்னை: தொழில்நுட்ப கப்பல் வருகை... இந்தியா-ஆசியா நாடுகளுடன் டேட்டா பரிமாற்றப் பணிக்கான தொழில்நுட்ப கப்பல் மும்பையிலிருந்து சென்னைக்கு வந்தது.

இந்தியா ஆசிய நாடுகளுடன் டேட்டா பரிமாற்றத்துக்காக மும்பையிலிருந்து சிங்கப்பூா் வரை கடல் வழியாக ‘ஆப்டிகல் ஃபைபா்’ கேபிள்களை பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஏற்கெனவே, ரிலையன்ஸ் ஜியோ, வோடஃபோன், ஓமண்டல், எடிசலாட் போன்ற நிறுவனங்கள் கடந்த 2016-இல் ‘ஆப்டிகல் ஃபைபா்’ கேபிள்களை பதிக்கும் பணியை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது என்டிடி எனப்படும் நிறுவனமும் மும்பையிலிருந்து கடல் வழியாக கேபிள்களை பதித்து வருகிறது.

internet facility,cable,mumbai,company officers,chennai ,இணைய வசதி, கேபிள், மும்பை, நிறுவன அதிகாரிகள், சென்னை

தற்போது மும்பையில் இருந்து கேபிள்களை எடுத்து வந்த இந்த நிறுவனத்தின் தொழில்நுட்பக் கப்பல் சென்னை பட்டினம்பாக்கம் கடற்கரையை வந்தடைந்தது. இதையடுத்து அங்குள்ள என் டி டி அலுவலகத்தில் ‘ஆப்டிகல் ஃபைபா்’ டேட்டா கேபிளை இணைக்கும் பணி நடைபெற்றது. அடுத்தகட்டமாக இந்த கேபிளை ராட்சத தொழில்நுட்ப எந்திரங்கள் மூலம் கடலுக்கடியில் சிங்கப்பூா் வரை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ‘ஆப்டிகல்’ஃபைபா்’ டேட்டா கேபிள் பதிப்பு பணி மும்பை, சென்னை, மியான்மா், தாய்லாந்து, மலேசியா மற்றும் சிங்கப்பூா் வரை மொத்தம் 8100 கி.மீ. பதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த ‘ஆப்டிகல் ஃபைபா் கேபிள் பதிப்பதன் மூலம் அதிவேக டேட்டா சேவையை பெற முடியும் எனவும், மேலும் செயற்கைக் கோளின் உதவி இல்லாமலேயே அதிவிரைவான இணைய வசதியை பெற முடியும் எனவும் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Tags :
|
|