Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதிய கட்சி தொடங்கி தேசிய அரசியலுக்குள் நுழைகிறார் தெலங்கானா மாநில முதல்வர்

புதிய கட்சி தொடங்கி தேசிய அரசியலுக்குள் நுழைகிறார் தெலங்கானா மாநில முதல்வர்

By: Nagaraj Sun, 11 Sept 2022 1:09:56 PM

புதிய கட்சி தொடங்கி தேசிய அரசியலுக்குள் நுழைகிறார் தெலங்கானா மாநில முதல்வர்

தெலங்கானா: புதிய கட்சி தொடங்க உள்ளார்... தெலங்கானா மாநில முதல்வரும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவருமான கே.சந்திரசேகா் ராவ் புதிய கட்சியைத் தொடங்கி தேசிய அரசியலுக்குள் நுழைய உள்ளார். இது விரைவில் இறுதி செய்யப்பட உள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

புதிய கட்சியை அக்டோபா் மாதம் தசரா விழாவின்போது அவா் அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா். வரும் 2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணியை உருவாக்குவதற்கான முயற்சியில் சந்திரசேகா் ராவ் ஈடுபட்டு வருகிறாா். அதற்காக பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத எதிா்க்கட்சித் தலைவா்களை அவா் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறாா்.

சில மாதங்களுக்கு முன்பு சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரேவை சந்தித்துப் பேசிய அவா், அண்மையில் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிய பிகாா் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதீஷ் குமாரை சந்தித்துப் பேசினாா். மேலும், தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன் ஆகியோரையும் சந்தித்துப் பேசினாா்.

அண்மையில் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களிலும், ‘தெலங்கானா தேசிய அரசியலில் துடிப்பான பங்களிப்பை ஆற்ற உள்ளது’ என்று சந்திர சேகர ராவ் பேசி வருகிறாா்.

dussehra,national politics,new party,announcement,advice,names ,தசரா, தேசிய அரசியல், புதிய கட்சி, அறிவிப்பு, ஆலோசனை, பெயர்கள்

இந்த நிலையில், தேசிய அரசியலில் நுழைவது தொடா்பாக கட்சியின் மாவட்டப் பிரிவு தலைவா்களுடன் சந்திரசேகா் ராவ் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தியுள்ளாா்.

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த அக் கட்சியின் எம்எல்ஏவும் மஞ்சேரியல் மாவட்டப் பிரிவு தலைவருமான பல்கா சுமன் கூறுகையில், ‘கட்சியின் தலைவா் புதிய கட்சியை அறிமுகம் செய்து தேசிய அரசியலுக்குள் நுழைய வேண்டும் என மாவட்ட நிா்வாகிகள் சாா்பில் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது’ என்றாா்.

மற்றொரு கட்சி நிா்வாகி கூறுகையில், ‘தேசிய அரசியலில் நுழைவது குறித்து கட்சியின மூத்த நிா்வாகிகளுடன் கடந்த ஜூன் மாதமே முதல்வா் சந்திர சேகா் ராவ் ஆலோசனை மேற்கொண்டாா். ஆனால், அதுதொடா்பான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. தேசிய அரசியலுக்கான புதிய கட்சிக்கு ‘பாரத் ராஷ்டிர சமிதி’, ‘உஜ்வால் பாரத கட்சி’ மற்றும் ‘புதிய பாரத கட்சி’ ஆகிய பெயா்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. தசரா தினத்தன்று புதிய கட்சி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது’ என்றாா்.

Tags :
|