Advertisement

கொரோனா பரிசோதனையை அதிகரிக்க தெலுங்கானா அரசு முடிவு

By: Nagaraj Sat, 25 July 2020 12:51:57 PM

கொரோனா பரிசோதனையை அதிகரிக்க தெலுங்கானா அரசு முடிவு

கொரோனா பரிசோதனை அதிகரிக்க முடிவு... தெலுங்கானாவில் தினசரி நடத்தப்படும் கொரோனா தொற்றுக்கான பரிசோதனையை அதிகரிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானாவில் கொரோனா வைரசின் தாக்கம் கடந்த சில நாட்களாக உச்சத்தை அடைந்து வருகிறது. மாநிலத்தில் தினசரி தொற்று பாதிப்பு உசுசகட்டத்தை நோக்கி செல்வதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆயினும் பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது.

கொரோனா தொற்றை கண்டு மக்கள் பீதி அடைய வேண்டாம். பாதகாப்பாக அரசின் வழிமுறைகளை பின்பற்றி நடந்தால் போதுமானது என முதல்வர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளும் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.

corona,experiment,enhance,control ,கொரோனா, பரிசோதனை, அதிகரிக்க, கட்டுப்பாட்டு

கொரோனா பாதிப்புகளை கண்டறிய பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். அதன் மூலமாகவே பாதிக்கப்பட்ட நபர்களை கண்டறிந்து தகுந்த சிகிச்சையை அளிக்க முடியும்.

இது தொடர்பாக பொது சுகாதார மற்றும் குடும்பநலத்துறையின் இயக்குனர் டாக்டர் ஜி. சீனிவாச ராவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், தெலுங்கானாவில் அதிகரித்து வரும் தொற்றை கட்டுக்குள் வைக்க, தற்போது தினசரி நடத்தப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி, தற்போது தனியார் மற்றும் அரசு ஆய்வகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் பிசிஆர் சோதனை உட்பட 15,000 வரை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதனை 20,000 முதல் 25,000 வரையாக (நாளொன்றின்) சராசரி பரிசோதனையை அதிகரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தொற்று தீவிரமடைந்து உள்ளதால் மக்கள் குறைந்தது 4 முதல் 5 வாரங்களுக்கு மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அரசு வழிகாட்டுதலின் படி, மாஸ்க், சமூக இடைவெளி, கை சுத்தம் போன்றவற்றை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். கொரோவை கட்டுப்படுத்துவது சவாலாக இருந்தாலும், தேவையான நடவடிக்கையை மாநில அரசு சிறப்பாக எடுத்து வருகிறது. தற்போது வானிலை மாறிக்கொண்டிருப்பதால், கொரோனா தொற்றுடன் பருவ கால நோய்களும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். ஐதராபாத் உள்ளிட்ட கட்டுப்பாட்டு மண்டலங்களில் இருந்து சிறு நகரம் மற்றும் மாவட்டங்களுக்கு தொற்று வேகமாக பரவுகிறது. இவ்வாறு தெரிவித்தார்.

Tags :
|