Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தெலுங்கானா -மதுரை சிறப்பு ரயில் இந்த தேதி முதல் இயக்கம்

தெலுங்கானா -மதுரை சிறப்பு ரயில் இந்த தேதி முதல் இயக்கம்

By: vaithegi Sun, 16 Apr 2023 4:17:07 PM

தெலுங்கானா -மதுரை சிறப்பு ரயில் இந்த தேதி முதல் இயக்கம்

சென்னை: தெலுங்கானா மாநிலம் காச்சிகுடாவிலிருந்து மதுரைக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படவுள்ளது. இதையடுத்து இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் ஏப். 17-ம் தேதி முதல் ரயில் நிலையத்திலிருந்து திருப்பதி, காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி வழியாக மதுரைக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.

அதாவது ஏப். 24-ம் மே 1 மற்றும் 8 தேதிகளிலும் ஜூன் மாதம் 5,12, 19, 26 ஆகிய தேதிகளிலும் இந்த ரயில் இயக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

special train,telangana,madurai , சிறப்பு ரயில் ,தெலுங்கானா ,மதுரை

இதையடுத்து இந்த ரயிலானது காச்சிகுடாவிலிருந்து இரவு 8.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.45 மணிக்கு மதுரையை வந்தடையும். மேலும் மதுரையில் இருந்து இந்த ரயில் ஏப். 19, 26 மற்றும் மே. 3,10, 17, 24, 31, ஜூன் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் இயக்கப்படவுள்ளது.

ரயில் மதுரையில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.05 மணிக்கு காச்சிகுடா நிலையத்தை சென்றடையும்.

மேலும் தற்போது இச்சிறப்பு கட்டண ரயிலுக்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. தெற்கு ரயில்வேயின் இந்த புதிய ரயில் சேவை மதுரை வாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Tags :