Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தெலங்கானா மாநிலத்தில் 36 லட்சம் டன் காய்கறிகள் உற்பத்திக்கு இலக்கு

தெலங்கானா மாநிலத்தில் 36 லட்சம் டன் காய்கறிகள் உற்பத்திக்கு இலக்கு

By: Nagaraj Wed, 08 July 2020 08:48:10 AM

தெலங்கானா மாநிலத்தில் 36 லட்சம் டன் காய்கறிகள் உற்பத்திக்கு இலக்கு

ஒரே ஆண்டில் 36 லட்சம் டன் காய்கறி உற்பத்தி செய்ய இலக்கு... வரும் 2020-21 ம் ஆண்டில் 36 லட்சம் டன் காய்கறி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தெலங்கானா மாநில தோட்டக்கலை இயக்குனர் வெங்கட்ராமி ரெட்டி கூறி உள்ளார்.

இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: ஒவ்வொரு நபரும் ஆண்டு ஒன்றுக்கு 90 கிலோ காய்கறி பயன்படுத்துகிறார். அதன்படி காய்கறிகளுக்கு சுமார் 11,130 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. பிற மாநிலங்களில் இருந்து காய்கறிகளை இறக்குமதி செய்வதை தவிர்க்கும் வகையில் மாநில தேவைகளுக்கு ஏற்ற காய்கறிகளை பயிரிடுவதற்காக 5.24 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்ய தோட்டக்கலைத்துறை முடிவு செய்துள்ளது.

vegetable,target,fruit cultivation,horticulture,sector,cultivation ,காய்கறி, இலக்கு, பழ சாகுபடி, தோடடக்கலை, துறை, சாகுபடி

மாநிலத்தில் பழங்களின் சாகுடி 4.35லட்சம் ஏக்கராக உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 22.97 லட்சம் மெட்ரிக் டன் விளைச்சல் கிடைக்கிறது. தற்போது 14 வகையான பழங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் 12 வகை பழங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. மா, எலுமிச்சை, பப்பாளி மற்றும் முலாம்பழங்களில் மாநில தேவைக்கு போக சுமார் 18.44 லட்சம் மெட்ரிக்டன் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

வாழைப்பழம் சப்போட்டா, ஆப்ரிகாட், பருப்பு ,ஆப்பிள், அன்னாசிபழம் போன்றவை இறக்குமதிசெய்யப்படுகிறது. இதனையடுத்து தற்போதுள்ள பழசாகுபடி நிலத்தை மேலும் 65,866 ஏக்கர் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் 3.85 லட்சம் ஏக்கரில் 8 வகையான மசாலா பொருட்கள் சுமார் 7.85 லட்சம் மெட்ரிக் டன் என்ற அளவில் அறுவடை செய்கிறோம். மாநிலத்தில் பூண்டு, இஞ்சி, சீரகம் புளி போன்ற பயிர்களை பயிரிட விவசாயிகளை ஊக்குவிக்க சுமார் 95,646 ஏக்கர் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

15 மில்லியன் டன் எண்ணெய் இறக்குமதி மாநில தேவைக்காக சுமார் 15 மில்லியன் டன் அளவிற்கு எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. எண்ணெய் இறக்குமதியில் சுமார் 60 சதவீதம் அளவிற்கு பாமாயில் இடம் பெற்றுள்ளது. எனவே எண்ணெய் பனை சாகுபடியை ஊக்குவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

Tags :
|
|