Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் இன்று வெப்பநிலை இயல்பிலிருந்து சற்று அதிகமாக இருக்கக்கூடும்

தமிழகத்தில் இன்று வெப்பநிலை இயல்பிலிருந்து சற்று அதிகமாக இருக்கக்கூடும்

By: vaithegi Sun, 16 July 2023 09:44:20 AM

தமிழகத்தில் இன்று வெப்பநிலை இயல்பிலிருந்து சற்று அதிகமாக இருக்கக்கூடும்

சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று நாளை முதல் வருகிற 21ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

இதனை அடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சிலபகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.

temperature,rainfall ,வெப்பநிலை ,மழை

மேலும் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் வெப்பநிலை இன்று உயரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதாவது, தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்க கூடும் என்றும், ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :