Advertisement

நாமக்கலில் இன்று முதல் 5 நாட்கள் வெப்பம் உயர வாய்ப்பு

By: vaithegi Wed, 12 Apr 2023 11:08:12 AM

நாமக்கலில் இன்று முதல் 5 நாட்கள் வெப்பம் உயர வாய்ப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 5 நாட்கள் கோடை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து இதுதொடர்பாக ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மேலும் கடந்த 5 நாட்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது. ஆனால் இன்று (12-ம் தேதி) முதல் 16-ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை 104 டிகிரி பாரன்ஹீட் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

heat,namakkal ,வெப்பம் ,நாமக்கல்

இதையடுத்து குறைந்த பட்ச வெப்பநிலை 22 முதல் 25 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும். வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்படும். மழைக்கான வாய்ப்பு இல்லை.

காற்றின் ஈரப்பதம் 20 முதல் 70 சதவீதம் வரை இருக்கும். காற்றின் வேகம் கிழக்கு, வட கிழக்கு மற்றும் தெற்கு திசையிலிருந்து மணிக்கு 4 முதல் 6 கிமீ வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.


Tags :
|