Advertisement

நேற்று 14 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது

By: vaithegi Tue, 16 May 2023 09:53:08 AM

நேற்று 14 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது

சென்னை: தமிழகத்தில் இன்றும் நாளையும் இயல்பை விட வெப்பநிலை உயரும் என்று வானிலை மையம் தகவல் .. தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், இன்றும் நாளையும் வெப்பம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

இதையடுத்து அதன்படி, இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். தமிழ்நாட்டில் கத்திரி வெயில் வாட்டி வதைத்து கொண்டு வருகிறது. நேற்று 14 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது.

sun,degree,celsius ,வெயில் ,டிகிரி,செல்சியஸ்

அதன்படி, சென்னை, மதுரை, கடலூர், ஈரோடு, கரூர், நாகை, நாமக்கல், பாளையங்கோட்டை, பரங்கிப்பேட்டை, சேலம், தஞ்சை, திருத்தணி, வேலூர் ஆகிய நகரங்களில் வெயில் சதம் அடித்தது.

இதையடுத்து இதில் அதிகபட்சமாக வேலூரில் 108.14 டிகிரி வெயில் பதிவானது. மேலும், வருகிற நாட்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்பதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுவுள்ளது.

Tags :
|
|