Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை உள்பட 20 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது

சென்னை உள்பட 20 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது

By: vaithegi Wed, 17 May 2023 09:58:35 AM

சென்னை உள்பட 20 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது

சென்னை: தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கியபோதிலும், ஆரம்பத்தில் சில இடங்களில் மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவி வந்தது. வெயிலின் தாக்கமும் பெரிதாக பாதிக்கவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே வெயில் வாட்டி வதைத்து கொண்டு வருகிறது.

இதையடுத்து சென்னை உள்பட தமிழகத்தில் சில மாவட்டங்களில் வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படியே நேற்று முன்தினம் 12 மாவட்ட மாவட்டங்களில் வெயில் சதமடித்தது. அந்தவகையில் சென்னையில் 104 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தியது.

degree,chennai,vail ,டிகிரி,சென்னை ,வெயில்

இதன் தொடர்ச்சியாக சென்னையில் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நேற்று 109 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகி மக்களிடையே பெரும் கலக்கத்தை உருவாக்கியுள்ளது. சென்னையில் வெயிலின் அளவு 4 டிகிரி உயர்ந்து 107 டிகிரியாக பதிவாகும் என வானிலை மையம் எச்சரித்திருந்தது.

ஆனால் அந்த கணிப்பையும் தாண்டி சென்னை மீனம்பாக்கத்தில் 109° ஆக பதிவாகி உள்ளது. வழக்கமாக அதிக வெப்பம் பதிவாகும் வேலூரில் நேற்று 108 டிகிரி வெப்பநிலை பதிவானது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். சென்னை திருவள்ளூர் வேலூர் மட்டுமல்லாது திருச்சி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் நேற்று வெயில் சதம் அடித்தது.


Tags :
|