Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் வெப்ப நிலையில் 3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்பு

இந்தியாவில் வெப்ப நிலையில் 3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்பு

By: vaithegi Thu, 13 Apr 2023 3:23:54 PM

இந்தியாவில் வெப்ப நிலையில் 3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்பு

இந்தியா: இந்தியாவில் தற்போது கோடை காலம் நிலவி கொண்டு வருகிறது. இந்நிலையில் வெப்ப நிலையில் 3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் ... இந்தியாவில் நடப்பு ஆண்டு ஜூன் வரை வெப்பநிலை வழக்கத்தை விட சற்று உயரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக பீகார், உத்திரபிரதேஷ், மேற்கு வங்காளம், சத்தீஸ்கர், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

celsius,india,temperature ,செல்சியஸ் ,இந்தியா, வெப்ப நிலை

மேலும் குஜராத்தில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து தற்போது தமிழகம், கேரளா, கோவா உள்ளிட்ட மாநிலங்களில் வெப்பநிலை 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை வேலூர், மதுரை, திருச்சி, சேலம், சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது. இதையடுத்து வரும் நாட்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் எனவும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|