Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் இன்று 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயரும்

தமிழகத்தில் இன்று 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயரும்

By: vaithegi Fri, 04 Aug 2023 11:29:02 AM

தமிழகத்தில் இன்று 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயரும்

சென்னை : சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி முதல் 104 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கக்கூடும்.

ஓரிரு இடங்களில் வழக்கத்தைவிட 4 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகமாக இருக்கக்கூடும். இதனை அடுத்து வருகிற 9-ஆம் தேதி வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

temperature,fahrenheit,chennai meteorology ,வெப்பநிலை ,ஃபாரன்ஹீட் ,சென்னை வானிலை ஆய்வு

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சிலபகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

மேலும் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 84 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :