Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் வெப்பநிலை இயல்பிலிருந்து சற்று அதிகமாக இருக்கக்கூடும்

இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் வெப்பநிலை இயல்பிலிருந்து சற்று அதிகமாக இருக்கக்கூடும்

By: vaithegi Sun, 30 July 2023 4:04:59 PM

இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் வெப்பநிலை இயல்பிலிருந்து சற்று அதிகமாக இருக்கக்கூடும்

சென்னை : சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: இன்றும் (ஜூலை 30) மற்றும் நாளையும் (ஜூலை 31) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress) காரணமாக அசவுகரியம் ஏற்படலாம். மேலும், இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

chennai meteorological center,temperature ,சென்னை வானிலை மையம் ,வெப்பநிலை

மீனவர்களுக்கான எச்சரிக்கை | > வங்கக் கடல் பகுதிகள்: தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளிலும், தெற்கு இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலும், அந்தமான் கடல் பகுதிகளிலும்,

வருகிற ஜூலை 30 ஆம் தேதி முதல் ஆக.3 ஆம் தேதி வரை சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்த படுகிறார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :