Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் கோயில்கள் திறப்பு குறித்து விரைவில் அறிவிப்பு வரும் என்று எதிர்பார்ப்பு

தமிழகத்தில் கோயில்கள் திறப்பு குறித்து விரைவில் அறிவிப்பு வரும் என்று எதிர்பார்ப்பு

By: Karunakaran Thu, 07 May 2020 5:14:56 PM

தமிழகத்தில் கோயில்கள் திறப்பு குறித்து விரைவில் அறிவிப்பு வரும் என்று எதிர்பார்ப்பு

சென்னை: ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் விரைவில் கோயில்களும் திறக்கப்படலாம் என்று தெரிய வந்துள்ளது.

மே 4ஆம் தேதி முதல் மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட போதிலும் ஊரடங்கு உத்தரவு போன்றே தமிழகத்தில் எந்த பகுதியிலும் தெரியவில்லை. பேருந்துகள், ரயில்கள் தவிர மற்ற அனைத்தும் கிட்டத்தட்ட இயங்கிக்கொண்டு தான் இருக்கிறது.

temple,tamilnadu,announcement,33 percent employees ,தமிழகம், கோயில்கள், அறிவிப்பு, 33 சதவீத பணியாளர்கள், எதிர்பார்ப்பு

கடைகள் திறக்கப்பட்டு கடைவீதிகளில் பொதுமக்கள் சர்வ சாதாரணமாக நடமாடி வருகின்றனர். இன்று முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறந்து விட்டதால் மது வாங்க திருவிழா கூட்டம் போல் திரண்டு நிற்கின்றனர். இதனால் சமூக விலகல் என்பது கேள்விக்குறியாகி விட்டது. இதனை அடுத்து கோவில்களையும் திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

temple,tamilnadu,announcement,33 percent employees ,தமிழகம், கோயில்கள், அறிவிப்பு, 33 சதவீத பணியாளர்கள், எதிர்பார்ப்பு

இருப்பினும் 33 சதவீத பணியாளர்களுடன் கோவில்களை திறக்க தமிழக அரசு அனுமதித்து உள்ளதாகவும், இதனை அடுத்து விரைவில் அனைத்து கோயில்களும் திறக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Tags :
|