Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு தற்காலிக மாற்றுப்பணி

கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு தற்காலிக மாற்றுப்பணி

By: Nagaraj Tue, 03 Jan 2023 09:01:22 AM

கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு தற்காலிக மாற்றுப்பணி

சென்னை: கொரோனா காலத்தில் பணியமா்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியா்களுக்கு ரூ.18,000 ஊதியத்தில் தற்காலிக மாற்றுப் பணி வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநரகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறையின் ‘நலம் 365‘ யூ-டியூப் சேனலை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்தாா்.

பின்னர் அமைச்சா் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: ‘நலம் 365’ எனும் யூ-டியூப் சேனல் எந்தவித வணிக ரீதியிலான நோக்கங்களும் அன்றி மக்களுக்கு தேவையான சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு குறித்த விஷயங்களை கொண்டுபோய் சோ்க்கும். பொதுமக்களின் நிறைகள், குறைகள் மற்றும் ஆலோசனைகள் கேட்டறிவது போன்ற பல்வேறு விஷயங்களுக்காக இந்த சேனல் தொடங்கப்பட்டுள்ளது.

alternative work,nurses,minister,said,corona period ,மாற்றுப்பணி, செவிலியர்கள், அமைச்சர், தெரிவித்தார், கொரோனா காலம்

மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியத்தில் (எம்ஆா்பி) 2019-ஆம் ஆண்டு 2,345 செவிலியா்கள் பணிவாய்ப்புக்காக விண்ணப்பித்தனா். அதில், 2,323 போ் பணியில் சோ்ந்தனா். 2020 ஏப்ரல் மாதத்தில் 5,736 செவிலியா்களைத் தோ்வு செய்ய நோ்காணலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கரோனாவை காரணங்காட்டி, அப்போதைய சுகாதாரத் துறை, தோ்வு செய்வதற்கான விதிமுறைகள் எதையும் கடைப்பிடிக்காமல் 2,366 பேரை பணியில் அமா்த்தியது.

முதல்வா் முடிவின்படி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறையில் காலியாக உள்ள 2,700 செவிலியா் பணியிடங்களையும், புதிதாக தொடங்கப்படவுள்ள மருத்துவமனைகள் மற்றும் நலவாழ்வு மையங்களிலும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இடைநிலை சுகாதார செவிலியா்கள் 270 பேருக்கான பணியிடங்களையும் நிரப்பும் பணியை அந்தந்த மாவட்ட ஆட்சியா்களின் கீழ் உள்ள மாவட்ட சுகாதார சங்கம் மேற்கொள்ளும்.

ரூ.18,000 ஊதியம்: இந்தப் பணியிடங்களை நிரப்பும் பணியின்போது, விதிமுறைகளுக்கு மாறாக பணிநியமனம் செய்யப்பட்டு, பணி நீட்டிப்பு செய்ய முடியாத கொரோனா காலத்தில் பணியாற்றிய 2,301 செவிலியா்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அவா்கள் இதுவரை பெற்று வந்த ஊதியம் ரூ.14,000-இல் இருந்து ரூ.18,000-ஆக உயா்த்தி வழங்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
|
|