Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மதுரை -போடி இடையேயான ரயில் சேவை தாற்காலிமாக ஒத்திவைப்பு

மதுரை -போடி இடையேயான ரயில் சேவை தாற்காலிமாக ஒத்திவைப்பு

By: vaithegi Sat, 04 Feb 2023 3:05:55 PM

மதுரை -போடி இடையேயான ரயில் சேவை தாற்காலிமாக ஒத்திவைப்பு

சென்னை: ரயில் சேவை ஒத்திவைப்பு .... தமிழகத்தில் மதுரை - போடி இடையே ரயில் பாதை அகலப்படுத்தும் பணி கடந்தாட்சி காலத்தில் போதிய நிதி ஒதுக்கீடு இல்லாத காரணத்தால் கிடப்பில் போடப்பட்டது. இது பற்றி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கடந்த 2022ம் ஆண்டு மக்களுக்கு ரயில் சேவையை அளிக்கும் பொருட்டு மதுரை - போடி இடையேயான ரயில் பாதை பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்ட பணிகள் துரிதப்படுத்தப்பட்டது.

இதையடுத்து இந்தப் பகுதிகள் முடிவடைந்து சோதனை ஓட்டமும் மிக சிறப்பாக நிறைவு பெற்ற நிலையில் தேனி வரை இயங்கும் பயணிகள் ரயில் மற்றும் சென்னையில் இருந்து மதுரைக்கு வரும் விரைவு ரயில் ஆகியவை 19-ந் தேதி முதல் போடி வரை நீட்டிக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்தது.

train service,postponement ,ரயில் சேவை ,ஒத்திவைப்பு

இதனையடுத்து மக்கள் ரயிலில் பயணிக்க திட்டமிட்டு வந்த நிலையில் மீண்டும் ரயில் சேவையானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் தற்போது மதுரை ரயில்வே நிலையத்தில் தண்டவாள சீரமைப்பு பணிகள் நடைபெற்று கொண்டு வருகிறது .

எனவே இதன் காரணமாக 16-ம் தேதி முதல் மார்ச் 7-ந் தேதி வரை இரு மார்க்கமாகவும் ரயில் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிப். 19-ந் தேதி ரயில் சேவை மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருகிறது.

Tags :