தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி இன்று டிஸ்சார்ஜ்
By: Nagaraj Fri, 02 Oct 2020 5:14:05 PM
இன்று டிஸ்சார்ஜ்... கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து, இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து மருத்துவக் குழுவினரால் தொடர் மதிப்பீடு செய்யப்பட்டு, கண்காணிப்பில் இருந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவரும் சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்ததன் மூலம் உடல்நிலையில்
நல்ல முன்னேற்றம் அடைந்து, இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக மருத்துவமனை
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் விஜயகாந்துக்கும்,
பிரேமலதாவுக்கும் கொரோனா நெகடிவ் ஆகிவிட்டதா என்பது பற்றி அதில் குறிப்பு
ஏதுமில்லை. இந்த தகவல் தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.