Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் ஒரே வாரத்தில் 10 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படும் அபாயம்

சென்னையில் ஒரே வாரத்தில் 10 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படும் அபாயம்

By: Nagaraj Fri, 12 June 2020 11:06:36 AM

சென்னையில் ஒரே வாரத்தில் 10 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படும் அபாயம்

சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை... சென்னையில் ஒரு வாரத்தில் 10 ஆயிரம் பேரை கொரோனா தாக்கும் வாய்ப்பு உள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

சென்னையில் கொரோனா தொற்றால் இப்போது 27 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 13 ஆயிரம் பேர், சிகிச்சையில் உள்ளனர். மேலும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், தொற்று அறிகுறியுடன் உள்ளனர்.

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகள் நிரம்பி உள்ளனர். ஆகையால் 55 வயதுக்கு உட்பட்ட, முதல் நிலை ஆபத்தில்லாத, 8,000க்கும் மேற்பட்டோர், மாநகராட்சி தனிமைப்படுத்துதல் மையத்திலும், அவர்களின் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

one week,10 thousand people,corona,attack,health professionals ,ஒரு வாரம், 10 ஆயிரம் பேர், கொரோனா, தாக்கும், சுகாதார நிபுணர்கள்

இந்நிலையில், அடுத்த ஒரு வாரத்தில், சென்னையில் மட்டும், 10 ஆயிரம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக, சுகாதாரத் துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து, சுகாதாரத் துறை நிபுணர்கள் தெரிவித்து இருப்பதாவது: சென்னையில் அடுத்து வரும் நாட்களில், தொற்று இரட்டிப்பாகும் வாய்ப்புகள் இருப்பதாக கருதுகிறோம்.

சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு வாரத்தில் மட்டும், 10 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இனிவரும் நாட்களிலும், இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறினர். இந்த தகவல் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் சமூக இடைவெளியை மக்கள் கடைப்பிடித்தால்தான் கொரோனா பரவலை தடுக்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Tags :
|
|