Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நைஜீரியாவில் விவசாயிகள் 100 பேர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு

நைஜீரியாவில் விவசாயிகள் 100 பேர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு

By: Nagaraj Mon, 30 Nov 2020 11:23:53 PM

நைஜீரியாவில் விவசாயிகள் 100 பேர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு

அதிர்ச்சி சம்பவம்... வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் நூறு பேரை கடத்தி கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொடூரம் நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் நடந்துள்ளது. பைக்குகளில் ஆயுதம் ஏந்தி வந்த கும்பல் விவசாயிகளை கடத்திச் சென்று கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளது.

மேலும் அந்த கும்பல் விவசாயிகளின் மனைவிகளையும் கடத்திச் சென்றுள்ளது. இந்த கொடூர செயலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

farmers,brutal killings,un. condemnation,nigeria ,விவசாயிகள், கொடூர கொலை, ஐ.நா. கண்டனம், நைஜீரியா

ஆனால் போகோ ஹாரம் அமைப்பு தான் செய்திருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. நைஜீரியாவில் அரசுத் தரப்பும், போகோ ஹாரம், ஐஎஸ் பயங்கரவாதிகளும் மோதிக் கொள்வதில் இதுபோன்று அப்பாவி மக்கள் உயிரிழக்கின்றனர்.

மக்கள் அரசுக்கு தங்களைப்பற்றி தகவல்கள் தருகிறார்கள் என்ற ஆத்திரத்தில் போகோ ஹாரம் பயங்கரவாதிகள் இதுபோன்ற மனிதத்தன்மையற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கொடூர செயலுக்கு ஐநா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Tags :