Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பசிபிக் பெருங்கடலின் லாயல்டி தீவுகளில் பயங்கர நிலநடுக்கம்

பசிபிக் பெருங்கடலின் லாயல்டி தீவுகளில் பயங்கர நிலநடுக்கம்

By: vaithegi Tue, 23 May 2023 2:20:54 PM

பசிபிக் பெருங்கடலின் லாயல்டி தீவுகளில் பயங்கர நிலநடுக்கம்

லாயல்டி : பசிபிக் பெருங்கடலில் லாயல்டி தீவுகளுக்கு தென்கிழக்கே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்து உள்ள லாயல்டி தீவுகளுக்கு தென்கிழக்கே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்நிலநடுக்கம் 6.1 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தகவல் தெரிவித்து உள்ளது.

இதையடுத்து நியூ கலிடோனியாவின் நௌமியாவிலிருந்து 415 கிமீ கிழக்கே உள்ள லாயல்டி தீவுகளில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்தில் தாக்கியுள்ளது. தற்பொழுது, சுனாமி குறித்த எச்சரிக்கை குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

earthquake,pacific ocean ,நிலநடுக்கம்,பசிபிக் பெருங்கடல்

மேலும், இம்மாதத்தில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள 3 வது நிலநடுக்கம் இதுவாகும். முன்னதாக, பிஜி, வானாட்டு தீவுகளுக்கு அருகே 7.7 என்ற ரிக்டர் அளவில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

பின்னர், நியூ கலிடோனியாவின் கிழக்கே 7.1 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :