Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாகிஸ்தான் பங்குச்சந்தை அலுவலகத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆக உயர்வு

பாகிஸ்தான் பங்குச்சந்தை அலுவலகத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆக உயர்வு

By: Karunakaran Tue, 30 June 2020 11:40:10 AM

பாகிஸ்தான் பங்குச்சந்தை அலுவலகத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆக உயர்வு

பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பங்குச்சந்தை அலுவலகம் உள்ளது. வழக்கம் போல் நேற்று காலை பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த பங்குச்சந்தை அலுவலகத்தில் ஆயுதங்களுடன் பயங்கரவாதிகள் சிலர் வந்தனர். முதலில் கையெறி குண்டை வீசி தாக்குதல் நடத்தினர். அதன்பின், துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

அதன்பின் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பதில் தாக்குதல் நடத்தினர். இதில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இருப்பினும் பயங்கரவாதிகள் சுட்டதில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 5 பாதுகாப்பு காவலர்கள் உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயமடைந்தனர்.

pakistan stock exchange,terrorist attack,karachi,10 death ,பாகிஸ்தான் பங்குச் சந்தை, பயங்கரவாத தாக்குதல், கராச்சி, 10 மரணம்

கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள், கையெறிகுண்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அதன்பின், அலுவலக பணியாளர்கள் அனைவரையும் போலீசார் வெளியேற்றினர். அதன்பின் அப்பகுதி முழுவதையும் சுற்றி வளைத்து தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

பங்குச்சந்தை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுட்டுக் கொல்லப்பட்ட 4 பயங்கரவாதிகளும் பலுசிஸ்தான் விடுதலை ராணுவ அமைப்பின் தற்கொலை படை பயங்கரவாதிகள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.


Tags :