Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆப்கானிஸ்தானில் சிறைச்சாலைக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் சிறைச்சாலைக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல்

By: Karunakaran Mon, 03 Aug 2020 10:23:40 AM

ஆப்கானிஸ்தானில் சிறைச்சாலைக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல்

ஆப்கானிஸ்தானின் ஆதிக்கம் செலுத்தி வரும் தலிபான் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத குழுக்களை அழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த உள்நாட்டு போரில் அந்நாட்டு பாதுகாப்பு படையினருக்கு ஆதரவாக அமெரிக்கா வீரர்களும் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பக்ரீத் பண்டிகையையொட்டி 3 நாட்கள் சண்டை நிறுத்தத்தில் அரசு படைகளும், தலிபான் பயங்கரவாதிகளும் ஈடுபட்டுள்ளனர். இரு தரப்பு அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படையில், நேற்று நூற்றுக்கும் அதிகமான தலிபான் பயங்கரவாதிகளை சிறையில் இருந்து ஆப்கான் அரசு விடுதலை செய்தது. தலிபான்களுடன் போர் நிறுத்தம் செய்யப்பட்டிருந்தாலும், ஐ.எஸ். பயங்கரவாத குழு தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.

terrorist attack,prison,afghanistan,3 dead ,பயங்கரவாத தாக்குதல், சிறை, ஆப்கானிஸ்தான், 3 பேர் இறப்பு

ஆப்கானிஸ்தானின் நஹாங்கர் மாகாணம் ஜலாலாபாத் நகரில் உள்ள சிறைச்சாலை வாசலுக்கு அருகே நேற்று வெடிகுண்டுகளுடன் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றை பயங்கரவாதிகள் வெடிக்க வைத்ததால், சிறைச்சாலையின் சுவர் இடிந்து விழுந்தது. அதன்பின், பயங்கர ஆயுதங்களுடன் வந்த பயங்கரவாதிகள் சிறைச்சாலையில் காவலுக்கு இருந்து பாதுகாப்பு படையினர் மீதும் சிறைக்கைதிகள் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த தாக்குதம் சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20-க்கும் அதிகமான பாதுகாப்பு படையினர், சிறைக்கைதிகள் காயமடைந்தனர். அதன்பின் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் மீது பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். சண்டை தொடர்ந்து நீடித்து வருவதால், இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.

Tags :
|