Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆப்கானிஸ்தானில் மாகாண கவர்னர் வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் மாகாண கவர்னர் வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல்

By: Karunakaran Tue, 06 Oct 2020 4:08:54 PM

ஆப்கானிஸ்தானில் மாகாண கவர்னர் வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல்

ஆப்கானிஸ்தானின் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே 19 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டு போரில் ஆப்கானிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. இருப்பினும், போரை முடிவுக்கு கொண்டுவர தலிபான்கள்- அமெரிக்கா இடையே உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளது. தற்போது, கத்தார் தலைநகர் தோகாவில் தலிபான்களுக்கும் ஆப்கானிஸ்தான் அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இதில் உடன்பாடு எட்டப்பட்டு பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டு சண்டை முடிவுக்கு கொண்டுவர தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமைதி பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் வந்தாலும் தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் தங்கள் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். ஆப்கானிஸ்தானின் லஹ்மேன் மாகாண கவர்னரான ரகமதுல்லா யார்மல் நேற்று தனது அலுவலகம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.

terrorist,suicide attack,provincial governor,afghanistan ,பயங்கரவாதி, தற்கொலைத் தாக்குதல், மாகாண ஆளுநர், ஆப்கானிஸ்தான்

கவர்னர் ரகமதுல்லா யார்மலுக்கு பாதுகாப்பாக பாதுகாப்பு படையினரின் வாகனங்களும் பின் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன. மிஹ்டர்லாம் என்ற பகுதியில் ரகமதுல்லாவின் கார் வந்தபோது சாலையின் எதிரே வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட ஒரு காரை ஓட்டிவந்த தலிபான் பயங்கரவாதி ரகமதுல்லாவின் வாகன அணிவகுப்பு மீது மோதி வெடிக்கச்செய்தான்.

இந்த தற்கொலைப்படை தாக்குதலில் ரகமதுல்லாவின் பாதுகாவளர்கள் 4 பேர், பொதுமக்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் உடல்சிதறி உயிரிழந்தனர். இருப்பினும், ஆளுநர் ரகமதுல்லா சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வரும் சம்பவம், அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கையாக அமைந்துள்ளது.

Tags :