சுற்றுலாப்பயணிகள் மீது காரை மோதி தாக்குதல் நடத்திய பயங்கரவாதி
By: Nagaraj Sat, 08 Apr 2023 10:55:53 AM
இஸ்ரேல்: பயங்கரவாதி சுட்டுக் கொலை... இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் சுற்றுலாப் பயணிகள் மீது காரை மோதி தாக்குதல் நடத்திய பயங்கரவாதியை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
காஃப்மன் கடற்கரை பூங்காவிற்கு அருகே நின்றிருந்தவர்கள் மீது அதிவேகமாக வந்த கார் ஒன்று மோதி கவிழ்ந்தது. இதில், ஒருவர் உயிரிழந்த நிலையில், 5 பேர் காயமடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த இஸ்ரேல் காவல்துறையினர், கூட்டத்தினர் வேண்டுமென்றே காரை மோதி தாக்குதல் நடத்திய அந்நபரை மடக்கி பிடிக்க முயன்ற போது, துப்பாக்கியால் பதில் தாக்குதல் நடத்த முயன்றதால் சுட்டுக் கொன்றனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலாப்பயணிகள் இந்த சம்பவத்தால் வெகுவாக அச்சமடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.