மின்சார வாகனங்களை ஜெர்மனியில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய டெஸ்லா முடிவு
By: Nagaraj Thu, 09 Nov 2023 6:36:38 PM
ஜெர்மனி: இந்தியாவிற்கு இறக்குமதி... டெஸ்லா நிறுவனம் முழுவதுமாக கட்டமைக்கப்பட்ட மின்சார வாகனங்களை ஜெர்மனியில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது.
டெஸ்லா நிறுவனத்தின் சீன தொழிற்சாலையில் இருந்து இறக்குமதி செய்வதில் இந்திய அரசு ஆர்வம் காட்டவில்லை என்றும், அதனால் ஜெர்மனியில் இருந்து டெஸ்லா வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெஸ்லா நிறுவனம் 20 லட்சம் ரூபாய் விலை மதிப்பிலான மின்சார வாகனங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
டெஸ்லா நிறுவனம் ஜெர்மனியில் உள்ள பிராண்டன்பர்க்கில் தொழிற்சாலையை அமைக்க 5 பில்லியன் யூரோக்களை முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது
Tags :
tesla |
company |
germany |
india |