Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் ஜைடஸ் கேடிலா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி மனிதர்களுக்கு பரிசோதனை

இந்தியாவில் ஜைடஸ் கேடிலா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி மனிதர்களுக்கு பரிசோதனை

By: Karunakaran Thu, 16 July 2020 09:42:28 AM

இந்தியாவில் ஜைடஸ் கேடிலா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி மனிதர்களுக்கு பரிசோதனை

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் தாக்கம் உச்சத்தை அடைந்து வருகிறது. இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 30 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கையும் 10 லட்சத்தை நோக்கி விரைந்து சென்று கொண்டிருக்கிறது. கொரோனா பரவலை தடுத்து நிறுத்த தடுப்பூசி ஒன்றுதான் அனைவரது நம்பிக்கையாக உள்ளது. இந்தியாவில் ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் என்ற தடுப்பூசியையும், ஆமதாபாத்தை சேர்ந்த ஜைடஸ் கேடிலா நிறுவனம் ஜைகோவ்-டி என்னும் தடுப்பூசியையும் உருவாக்கியுள்ளது.

india,zydus cadilla,corona vaccine,human test ,இந்தியா, ஜைடஸ் காடிலா, கொரோனா தடுப்பூசி, மனித பரிசோதனை

இந்த இரண்டு தடுப்பூசிகளையும் அந்தந்த நிறுவனத்தினர் விலங்குகளுக்கு செலுத்தி சோதித்து பார்த்து உள்ளனர். தற்போது, ஜைடஸ் கேடிலா நிறுவனம், தனது தடுப்பூசியை 1000 பேருக்கு செலுத்தி பார்க்கும் சோதனையை தொடங்கி இருப்பதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஜைடஸ் கேடிலா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவ பரிசோதனைக்கு முந்தைய கட்டத்தில் எலி, கினியா பன்றிகள், முயல்கள் போன்ற விலங்கு இனங்களில் இந்த தடுப்பூசி சோதித்து பார்க்கப்பட்டது. தடுப்பூசியின் நச்சு இயல் ஆய்வுகளில் எந்தவொரு பாதுகாப்பு கவலையும் ஏற்படவில்லை. மனிதர்களுக்கு செலுத்திப்பார்க்கும் சோதனைகள் நடைபெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|