Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் மனிதர்களுக்கு கோவேக்சின் கொரோனா தடுப்பூசி போடும் சோதனை தொடக்கம்

இந்தியாவில் மனிதர்களுக்கு கோவேக்சின் கொரோனா தடுப்பூசி போடும் சோதனை தொடக்கம்

By: Karunakaran Sat, 18 July 2020 10:50:19 AM

இந்தியாவில் மனிதர்களுக்கு கோவேக்சின் கொரோனா தடுப்பூசி போடும் சோதனை தொடக்கம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்து விட்டது. நாட்டிலே மகாராஷ்டிராவும், தமிழகமும் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, கர்நாடகத்திலும், பீகாரிலும் தினமும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 35 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 3 ஆயிரத்து 800-ஐ கடந்துள்ளது. கொரோனாவை தடுப்பூசி ஒன்றை தடுக்க முடியும்.

india,corona virus,corona test,corona vaccine ,இந்தியா, கொரோனா வைரஸ், கொரோனா சோதனை, கொரோனா தடுப்பூசி

பாரத் பயோடெக் நிறுவனம், புனேயில் உள்ள இந்திய வைராலஜி நிறுவனத்துடனும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடனும் இணைந்து ‘கோவேக்சின்’ என்ற தடுப்பூசியை கண்டறிந்துள்ளது. இதனை மனிதர்களுக்கு செலுத்திப்பார்க்கும் முதல் இரு கட்ட சோதனைகளை விரைவுபடுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடவடிக்கை எடுத்தது.

அரியானா மாநிலம் ரோட்டக்கில் உள்ள பி.ஜி.ஐ.எம்.எஸ். என்று அழைக்கப்படுகிற பண்டிட் பகவத் தயாள் சர்மா முதுநிலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில், ‘கோவேக்சின்’ தடுப்பூசியை தங்கள் உடலில் செலுத்திக்கொள்ள விரும்பும் தன்னார்வலர்கள் பதிவு 10 நாட்களாக நடந்தது. இதில் சுமார் 100 பேர் பதிவு செய்துள்ளனர். இதில் 3 பேருக்கு ‘கோவேக்சின்’ தடுப்பூசி வெற்றிகரமாக நேற்று போடப்பட்டது. தற்போது இந்தியாவில் ‘கோவேக்சின்’ தடுப்பூசியை மனிதர்களுக்கு போடும் சோதனை தொடங்கப்பட்டுள்ளது.

Tags :
|