Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவின் கோவேக்சின் கொரோனா தடுப்பூசி 375 பேர் மீது பரிசோதனை

இந்தியாவின் கோவேக்சின் கொரோனா தடுப்பூசி 375 பேர் மீது பரிசோதனை

By: Nagaraj Sat, 18 July 2020 8:22:06 PM

இந்தியாவின் கோவேக்சின் கொரோனா தடுப்பூசி 375 பேர் மீது பரிசோதனை

375 பேர் மீது பரிசோதனை... இந்தியாவின் கொரோனா தடுப்பூசியான கோவேக்சின் முதல் கட்டமாக 375 பேர் மீது பரிசோதிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் 7 நிறுவனங்கள் தடுப்பூசி ஆராய்ச்சியில் இறங்கியுள்ளன. இதில், ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் இன்டர்நேசனல் மருந்து தயாரிப்பு நிறுவனம், தேசிய வைரஸ் இயல் ஆய்வு நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உடன் இணைந்து, கோவேக்சின் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.

இந்த பாரத் பயோடெக் நிறுவனம்தான், மனிதர்கள் மீதான இரண்டு கட்ட பரிசோதனைகளுக்கு முதன் முதலில் அனுமதியையும் பெற்று, முதல்கட்ட பரிசோதனையை தொடங்கியுள்ளது. 375 பேரை கொண்டு நடத்தப்படும் இந்த பரிசோதனையில், தடுப்பூசியால் உடலில் ஏதேனும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறதா என ஆய்வு செய்யப்படும். இந்த பணியை நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள 12 மருத்துவமனைகள் மேற்கொள்கின்றன.

vaccine,adverse effect,test,corona ,தடுப்பூசி, எதிர்மறை விளைவு, சோதனை, கொரோனா

கோவேக்சின் பரிசோதனைக்கான ஏற்பாடுகளை செய்யுமாறு, பரிசோதனையில் ஈடுபடுத்துவதற்கான ஆட்களை தயார் செய்யுமாறும் கடந்த 7ஆம் தேதி, இந்த 12 மருத்துவமனைகளுக்கும் ஐசிஎம்ஆர் கடிதம் எழுதியுள்ளது. இதன் அடிப்படையில், டெல்லி எய்ம்ஸ், பாட்னா எய்ம்ஸ், சென்னை எஸ்ஆர்எம் உள்ளிட்ட 12 மருத்துவமனைகளில் முதல் கட்ட பரிசோதனை நடைபெறுகிறது.

இந்த பரிசோதனையில் இடம்பெறுபவர்களில் சிலருக்கு உண்மையான தடுப்பு மருந்தும், சிலருக்கு தடுப்பு மருந்து என்ற பெயரில் உடலில் எந்த விளைவையும் ஏற்படுத்தாத மருந்தும் கொடுக்கப்படும். யாருக்கு உண்மையான தடுப்பு மருந்து கொடுக்கப்படுகிறது, யாருக்கு கொடுக்கப்படவில்லை என்பது, மருந்தை கொடுப்பவருக்கோ, மருந்தை பெறுபவருக்கோ தெரியாது. இந்த விவரம் பரிசோதனை காலம் முடிவடைந்த பிறகே தெரியவரும்.

முதல் கட்டத்தில், எதிர்மறையான விளைவு ஏற்படுகிறதா என்பது மட்டுமே சோதிக்கப்படும். கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பு மருந்து வேலை செய்கிறதா என்பது, இரண்டாவது கட்டத்தில் பரிசோதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|