Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டிரைவர் இல்லாத டாக்ஸியை சோதனை ஓட்டம் நடத்தி பார்த்து உள்ளது ஊபர் நிறுவனம்

டிரைவர் இல்லாத டாக்ஸியை சோதனை ஓட்டம் நடத்தி பார்த்து உள்ளது ஊபர் நிறுவனம்

By: Nagaraj Sat, 10 Dec 2022 3:12:12 PM

டிரைவர் இல்லாத டாக்ஸியை சோதனை ஓட்டம் நடத்தி பார்த்து உள்ளது ஊபர் நிறுவனம்

அமெரிக்கா: டிரைவர் இல்லாத டாக்ஸியை சோதனை ஓட்டம் நடத்தி பார்த்து உள்ளது ஊபர் நிறுவனம்.

அமெரிக்க நாட்டில் டிரைவர் இல்லாத டாக்ஸி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ஊபர் நிறுவனம் அறிவித்துள்ளது. பொதுவாக ஒரு வாகனத்தில் டிரைவர் இல்லை என்றால் அது பாதுகாப்பானதாக இருக்குமா என்ற சந்தேகம் பலரது மத்தியிலும் வந்துவிடும். இந்நிலையில் ஊபர் நிறுவனம் டிரைவர் இல்லாத டாக்ஸி அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்த நிலையில் பலரும் பாதுகாப்பானதாக இருக்குமா என்று கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.

america,uber company,driverless taxi,introduction,design ,அமெரிக்கா, ஊபர் நிறுவனம், டிரைவர் இல்லாத டாக்ஸி, அறிமுகம், வடிவமைப்பு

இதற்கு ஊபர் நிறுவனம் கண்டிப்பாக 100% பாதுகாப்பாக இருக்கும் என்று பதில் அளித்துள்ளது. இந்த டாக்ஸி அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் நகரில் அடுத்த வருடம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

மேலும் ஊபர் நிறுவனத்துடன் மோஷனல் என்ற தொழில்நுட்ப நிறுவனம் கைகோர்த்து டிரைவர் இல்லாத டாக்ஸியை வடிவமைத்துள்ளது. இந்த டாக்சியின் சோதனையோட்டம் தற்போது நடைபெற்றுள்ளது.

Tags :