Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சர்வதேச எதிர்ப்புகளையும் மீறி தங்கராஜ் சுப்பையாவிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது

சர்வதேச எதிர்ப்புகளையும் மீறி தங்கராஜ் சுப்பையாவிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது

By: Nagaraj Wed, 26 Apr 2023 7:13:05 PM

சர்வதேச எதிர்ப்புகளையும் மீறி தங்கராஜ் சுப்பையாவிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது

சிங்கப்பூர்: எதிர்ப்புகளை மீறி தூக்கு தண்டனை... சர்வதேச எதிர்ப்புகளை மீறி சிங்கப்பூர் வாழ் தமிழரான தங்கராஜ் சுப்பையாவிற்கு அந்நாட்டில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

2017ஆம் ஆண்டு, ஒரு கிலோ கஞ்சா கடத்தலுக்கு துணை போனதாகக் கூறி கைது செய்யப்பட்ட தங்கராஜு சுப்பையாவிற்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

thangaraj subbiah,singapore,government,capital punishment,execution ,தங்கராஜ் சுப்பையா, சிங்கப்பூர், அரசாங்கம், தூக்கு தண்டனை, நிறைவேற்றம்

கஞ்சா கடத்தலில் அவர் நேரடியாக ஈடுபடாததால் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு குடும்பத்தினரும், மனித உரிமை அமைப்புகளும் மேல் முறையீடு செய்தன. அவருக்குச் சொந்தமான 2 செல்போன் எண்கள் மூலம் கஞ்சா கடத்தல் ஒருங்கிணைக்கப்பட்டதால் அவரும் குற்றவாளி என்ற முடிவில் சிங்கப்பூர் நீதிபதிகள் உறுதியாக இருந்தனர்.

ஐ.நா. மனித உரிமை ஆணையம், பிரிட்டன் பெருங்கோடீஸ்வரர் ரிச்சர்டு பிரான்ஸன் என பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளை மீறி தங்கராஜ் சுப்பையாவை தூக்கிலிட்டது சிங்கப்பூர் அரசாங்கம்.

Tags :