Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தங்கத்தேர்த் திருவிழா ... சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

தங்கத்தேர்த் திருவிழா ... சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

By: vaithegi Thu, 06 July 2023 10:07:51 AM

தங்கத்தேர்த் திருவிழா ... சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

தூத்துக்குடி: தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்.. தூத்துக்குடியில் அமைந்து உள்ள பிரசித்திபெற்ற பனிமயமாதா தேவாலயத்தில் அடுத்த மாதம் (ஆகஸ்ட் ) 5-ந் தேதி தங்கத்தேர்த் திருவிழா நடைபெற உள்ளது. எனவே இதனையொட்டி தெற்கு ரெயில்வே சார்பில், சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை அடுத்து அதன்படி , “இந்த சிறப்பு ரயில் (வ.எண்.06005) வருகிற 3-ந் தேதி சென்னையிலிருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 11.45 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் அதிகாலை 3.10 மணிக்கு தூத்துக்குடி ரயில் நிலையம் சென்றடைகிறது.

special train,thangatheerth festival , சிறப்பு ரயில்,தங்கத்தேர்த் திருவிழா

அதைத்தொடர்ந்து மறுமார்க்கத்தில், இந்த ரெயில் (வ.எண்.06006) வருகிற 4-ந் தேதி தூத்துக்குடியில் இருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடைகிறது. அதன் பின்னர் நள்ளிரவு 2.45 மணிக்கு சென்னை சென்றடைகிறது.

மேலும் இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, தூத்துக்குடி மேலூா் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்” என தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :