தஞ்சாவூர் மாநகராட்சி பகுதி சபா கூட்டம் நடந்தது
By: Nagaraj Sat, 16 Sept 2023 11:09:52 AM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சி பகுதி சபா கூட்டம் லெட்சுமிபுரம் பூங்காவில் நடைபெற்றது.
46 வட்ட மாமன்ற உறுப்பினரும், மண்டல குழு தலைவருமான கலையரசன் தலைமை வகித்தார். இதில் மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், ஆணையர் சரவணகுமார், மாநகராட்சி இளநிலை பொறியாளர் பாபு உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
லெட்சுமிபுரம், திருப்பதி நகர்,சுந்தரம் நகர் , ஜெ.ஜெ நகர், எல்.ஐ.சி காலணி விரிவாக்கம், இரயில் நகர், அணில் நகர் உள்ளிட்ட பகுதி நான்குக்குட்பட்ட நகர் நல சங்க நிர்வாகிகள் பங்கேற்று அனைத்து பகுதிகளிலும் சாலை போடப்பட்டதற்க்கும், பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்தியதற்கும் நன்றி தெரிவித்தனர்.
மேலும் இப்பகுதியில் மின்விளக்கு பராமரிக்கவும், பெயர்பலகை அமைக்கவும், குடிநீர் தடங்களை சரிசெய்யவும், ஆக்கிரமிப்பை அகற்றவும், பூங்கா அமைக்கவும் நடவடிக்கைகள் எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. தொடர்ந்து கோரிக்கைகள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவெடுக்கப்பட்டது.
கூட்டத்தில் வார்டு குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், ரவி, வெங்கடேசன், சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.