Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை மற்றும் தாத்தாவுக்கு ஆயுள் தண்டனை அளித்த தஞ்சை கோர்ட்

மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை மற்றும் தாத்தாவுக்கு ஆயுள் தண்டனை அளித்த தஞ்சை கோர்ட்

By: Dinesh Sat, 04 June 2022 4:50:13 PM

மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை மற்றும் தாத்தாவுக்கு ஆயுள் தண்டனை அளித்த தஞ்சை கோர்ட்

தஞ்சாவூர் : மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை உட்பட இருவருக்கு தஞ்சை நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் நஷ்டஈடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்திலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்கு இரு மகள்கள். இந்த இரு பெண் குழந்தைகளும் சிறுவயதாக இருக்கும் போதே தாய் இறந்துவிட்டார். இதனால் அந்த குழந்தைகளையும் பாட்டியும், சித்தியும் அழைத்துச் சென்று வளர்த்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு தந்தை தனது இரண்டு மகள்களையும் தன் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது மூத்த மகளை தந்தை அடிக்கடி பாலியல் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த மூத்த மகள் தனது தங்கையிடம் இதுபற்றி தெரிவித்து கதறி அழுதுள்ளார்.

தனது அக்காவின் வேதனையையும், அழுகையும் பார்த்து சகிக்க முடியாத அந்த தங்கை பக்கத்து வீட்டைச் சேர்ந்த தாத்தா முறையிலான 67 வயது உறவினரிடம் இதுகுறித்து தெரிவித்து அழுதுள்ளார். இதையடுத்து அந்த சிறுமிகளின் தந்தையிடம், தாத்தா முறையிலான அந்த உறவினர் நியாயம் கேட்பது போல சண்டை போட்டு இரு சிறுமிகளையும் தன் வீட்டுக்கு அழைத்து வந்து தங்க வைத்துள்ளார். ஆனால், மூத்த சிறுமியை தாத்தா முறையிலான உறவினரும் பாலியல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கிடையில் அந்த சிறுமி பூப்பெய்தினார்.மாத விடாய் காலத்தில் மூத்த சிறுமியை அவரது தந்தை வீட்டுக்கு உறவினர் அனுப்பி வைத்துள்ளார். அப்போது, சிறுமியை தந்தை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ய இதனால் சிறுமி கருவுற்றார். கருவை கலைக்க தந்தை முயற்சி செய்தும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை. ஏழு மாதங்கள் கடந்த நிலையில் கர்ப்பத்தால் அச்சிறுமியின் வயிறு பெரிதாகிவிட்டது. இதனால் சிறுமிக்கு ஏற்பட்ட கொடுமைகள் வெளியில் தெரிய வந்தது. தற்போது அச்சிறுமிக்கு வயது 15.

சிறுமிக்கு நேர்ந்த கொடூரங்கள் குறித்து அவரது சித்தி வல்லம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தையையும், தாத்தாவையும் கடந்த 2020, ஜூலை 1ம் தேதி கைது செய்தனர்.
பின்னர் தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வக்கீல் சசிரேகா ஆஜராகி வாதிட்டார். இந்த வழக்கை நீதிபதி ஜி. சுந்தரராஜன் விசாரணை செய்து தந்தைக்கும், தாத்தாவுக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ. 50,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்குமாறு அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தார்.

Tags :
|