Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அனைவருக்கும் நன்றி... உடல்நலம் தேறியது; முதல் அமைச்சர் ஸ்டாலின் தகவல்

அனைவருக்கும் நன்றி... உடல்நலம் தேறியது; முதல் அமைச்சர் ஸ்டாலின் தகவல்

By: Nagaraj Sun, 17 July 2022 11:08:17 PM

அனைவருக்கும் நன்றி... உடல்நலம் தேறியது; முதல் அமைச்சர் ஸ்டாலின் தகவல்

சென்னை: அனைவருக்கும் நன்றி... கொரோனா தொற்றில் இருந்து குணமடைய விரும்பிய அனைவருக்கும் நன்றி என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் மு.க.ஸ்டாலின் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார் தொடர்ந்து காய்ச்சல் மற்றும் உடற்சோர்வு இருந்ததன் காரணமாக அவர் கடந்த 14ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கொரோனா அறிகுறியினால் பரிசோதனை மற்றும் கண்காணிப்புக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. அத்துடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை சீராக உள்ளது. உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளது. தற்போது அவர் வேகமாக குணமடைந்து வருகிறார். தொடர்ந்து முதல்-அமைச்சருக்கு கொரோனா தொற்றில் இருந்து விடுபடுவதற்கான சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.

first minister,mk stalin,dmk workers,people,letter ,முதல் அமைச்சர், மு.க.ஸ்டாலின், திமுக தொண்டர்கள், மக்கள், கடிதம்

ஓரிரு நாட்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது இந்நிலையில்,குணமடைந்து விட்டேன் என்ற நல்ல செய்தியுடன், அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. கொரோனா சிகிச்சை முடிந்து நாளை வீடு திரும்ப உள்ளேன்; நலமுடன் பணியை தொடர்வேன். கொரோனா தொற்றில் இருந்து குணமுடைய வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி. கொரோனாவால் பாதிக்கப்பட்ட பின் ஆயிரக்கணக்கானோர் என்னை தொடர்பு கொண்டு நலம்பெற வாழ்த்தினர்.

'என் பணி மக்கள் தொண்டாற்றுவதே' என்று உறுதியேற்று தொடர்ந்து செயலாற்றி வருகிறேன். செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான முன்னேற்பாடுகளை நான் கவனித்து வருகிறேன்.
முதல்-அமைச்சர் என்ற முறையில் ஆற்ற வேண்டிய பணிகளை வீட்டில் இருந்தாலும் கவனித்த படிதான் இருப்பேன். வீட்டில் இருக்க சம்மதித்தாலும் ஓய்வில் இருந்திட மனம் ஒப்பவில்லை.

அரசியல் பாதையில் குறுக்கிடும் அத்தகைய பேர்வழிகளை இடக்கையால் புறந்தள்ளி நாம் முன்னேறிச்செல்வோம். நம்மை தாக்கி விளம்பரப்படுத்திக்கொள்ள நினைக்கும் வீணர்களுக்கு நாம் இடம் தரக்கூடாது. உயர்ந்த லட்சியத்தை அடைய வேண்டுமென்றால் அதற்கான உழைப்பைக் கொடுத்தே ஆக வேண்டும்.கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கும், மக்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார்.

Tags :
|